Thursday 29 September 2011

சாமானியன் முதல் பிரதமர் வரை - தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI)





                 நாட்டில் இப்பொது  எழும்  பல பிரச்சனைகள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தான் வெளி வருகிறது.  குறிப்பாக ஊழல் புகார்கள் எல்லாம் இச்சட்டத்தின் மூலம் பெறப்பட்டவைதான். இப்பொது கடைசியாக  வெளி வந்த பிரச்சனை நிதி அமைச்சரவையிலிருந்து பிரதமர் அலுவலகத்திற்கு  அனுப்பப்பட கடிதம். இதில் உள் துறை அமைச்சர் ப.சிதம்பரம்  இதற்கு முன் நிதி அமைச்சராக இருந்த போது 2 ஜி ஊழலை தடுத்திருக்க முடியும் என்பது தான். இப்படி அரசின் எல்லா செயல்பாடுகளையும் உடனுக்குடன் யார் வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் அரசு நம்மைப் பார்த்து பயந்து நேர்மையாக நடந்து கொள்ள முயற்சி செய்யும். இந்த பிரச்சனை நம்முடைய பிரச்சனையாக இருந்தாலும் இது சாமானிய மக்களுக்கு தொலைவில் உள்ள பிரச்சனை என்று சொல்லலாம். இந்த பிரச்சனையை அரசியல்வாதிகளும் அதனுடைய நெருங்கிய வட்டாரங்களும் வேண்டுமானால் உடனடியாக தெரிந்து கொள்ளலாம். அவர்கள் மூலம் சாமானிய மக்கள் தெரிந்து கொள்ளலாம். இதை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்.

             நாம் நம்மைச் சுற்றி நடக்கிற செயல்கள் அதாவது நமக்கு நடக்கிற செயல்கள் குறித்து தெரிந்து கொள்ள முற்ப்படலாம். நாம் படிக்கும் பள்ளிகள், கல்லூரிகள், பணிபுரியும் அரசு நிறுவனங்கள்  மற்றும் நாம் நேரடித் தொடர்பு வைத்துள்ள நிறுவனகள் ஆகியவற்றை இச்சட்டத்தின் மூலம் கேள்வி கேட்க முன் வரலாம். உதாரனமாக தெருவில் சாலை வசதி, தெரு விளக்கு வசதி, குடி நீர் வசதி போன்ற குறைபாடுகள் இருந்தால் சமந்தப்பட்ட அதிகாரிகளிடம் வளைந்து குனிந்து முறையிடுவதர்குப் பதிலாக இச்சட்டத்தைப் பயன்படுத்தி நாம் அவர்களிடம்  தைரியமாக  கேள்வி கேட்டு வசதிகளை செய்து தர வைக்கலாம். அப்படி இல்லை என்றால் பெறப்பட்ட அதிகாரப் பூர்வமான தகவல்களை வைத்துக் கொண்டு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கலாம். இவவாறு செய்யும் போது அவர்கள் நம்மைப் பார்த்து பயந்து நம்முடைய குறைகளை சரி செய்ய முன் வருவார்கள். இதற்காக நிறைய பணம் செலவிடத் தேவையில்லை. நேரத்தை அதிகம் செலவிடத் தேவையில்லை. நாம் செய்ய வேண்டிய ஒரே ஒரு செயல் என்னவென்றால், நாம் குறைந்த பட்சமாக நம்முடைய பிரச்சனைகளையாவது தெரிந்து கொண்டு அதை சரி செய்ய முன் வரவேண்டும்.
    
               இதை நன் ஏன் சொல்கிறேன் என்றால் என்னுடைய நெருங்கிய  நண்பர்கள்  கல்லூரியில் செய் முறைத் தேர்வில் முன் விரோதம் காரணமாக  குறைந்த மதிப்பெண் பெற்று   பழிவாங்கப்பட்டார்கள். நம்மை மீறி மாணவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று அவர்கள் மிக எளிதாக மாணவர்களை பழிவாங்கினார்கள்.

            அதாவது  5 பேர் கொண்ட குழுவாக எல்லா மாணவர்களையும் பிரித்து செய்முறைத் தேர்விற்கு ஏற்பாடு செய்தார்கள். அதில் இரண்டு குழுவில் உள்ள 2 மாணவர்கள் மட்டும் பழிவாங்கப்பட்டார்கள். மற்ற 3 மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் வழங்கியும் ஆசிரியர்களுக்குப் பிடிக்காத அந்த 2 மாணவர்களுக்கு மிகவும் குறைந்த மதிப்பெண் வழங்கியும் தேர்வு முடிவை வெளியிட்டார்கள். 5 பெரும் ஒரே செய்முறைத் தேர்வை தான் செய்தார்கள். ஆனால் 2 பேருக்கு மட்டும் மிக குறைந்த மதிப்பெண் எப்படி வழங்க முடியும். 5  பேரிடமும் வேறுபாடு இருக்கலாம் ஆனால் பெரிய வேறுபாடு இருக்கக் கூடாது. செய்முறைத் தேர்வின் விதிப்படி செயல் முறைக்கு ஒரு அளவுகோலின்படி மதிப்பெண், கேள்வி நேரத்தில் ஒரு அளவுகோலின்படியும், செய்முறை நோட்டுப் புத்தகத்தை சமர்பிப்பதற்கு  ஒரு அளவுகோலின்படியும் மதிப்பெண் வழங்கப்படும். அப்படியானால் இங்கே பழிவாங்க வேண்டிய மாணவர்களுக்கு கேள்வி நேரத்திலும்,  செய்முறை நோட்டுப் புத்தகத்தை சமர்பிப்பதிலும் வேண்டுமானால் மதிப்பெண்ணை குறைக்கலாம். ஏன் என்றால்  அது தனிப்பட்ட மாணவர்களின் செயல்பாடு. ஆனால் செயல் முறையில் இப்படி வித்தியாசம் காட்ட முடியாது அதை அனைவரும் ஒன்றாக செய்திருகிறார்கள். இந்த வழியில் ஆசிரியர்கள் ஏளனமாக இருந்து விட்டார்கள்.   மாணவர்கள் ஆசிரியரிடம் என்று விளக்கம் கேட்டார்கள். ஆசிரியர்கள் அவர்களை உதசினப்படுதினர்கள். உங்களால் ஒன்றும் செய்ய முடியாது முடிந்தால் செய்து பாருங்கள் என்று சொனார்கள். பின் பழி வாங்கப்பட்ட மாணவர்கள் கல்லூரி முதல்வரிடம் சென்று முறையிட்டார்கள், முதல்வரும் அவர்கள் உதைனப்படுதினார். 
 
            இறுதியாக மாணவர்கள் கையில் எடுத்த ஆயுதம் தகவல் அறியும் உரிமை சட்டம். செய்முறைத் தேர்வை கையாளும் முறையையும், மதிப்பெண் வழங்கும் முறையையும் வழங்குமாறு பல்கலைக்கழகத்திடம் இச்சட்டத்தின் மூலம் பெற்று கொண்டார்கள். பின் தங்களுக்கு மதிப்பெண் வழங்கிய முறையையும் பெற்றுக் கொண்டார்கள். இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தல் ஆசிரியர்கள் பழிவாங்கப் பட்டது தெரியவந்தது. மாணவர்கள் இப்பிரச்சனையை பெறப்பட்ட  தக்க ஆதரங்களுடன்  பல்கலைக்கழக பதிவாளரிடமும்,  துணை வேந்தரிடமும்  எடுத்தச் சென்றார்கள். தவறை தெரிந்து கொண்ட ஆசிரியர்களும், கல்லூரி முதல்வரும் மாணவர்களிடம் முறையிடும் நிலைமைக்கு வந்தார்கள். துணை வேந்தரிடம் பிரச்சனையை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்கள். நீண்ட நாள் அவர்கள் பணிவுடன் கேட்டுப்பர்தர்கள் ஆனால் மாணவர்கள் பின் வாங்கவில்லை. இறுதியாக துணைவேந்தர் தவறு செய்த ஆசிரியர்களை கண்டித்து மாணவர்களுக்கு மறு தேர்வை நடத்தினார்.  இங்கே தகவல் அறியும் உரிமை சட்டம்  மூலம் யார் தலை நிமிர்ந்து நின்றனர், யார் பயந்தனர் என்று தெரிந்திருக்கும்.

               
              தகவல் அறியும் உரிமை சட்டம் நமக்கும் அரசுக்கும் உள்ள இடைவெளியை குறைக்கும் சட்டம்.  இச்சட்டத்தை பயன்படுத்தினால் நம்மை நிர்வாகம் செய்யும் அரசின் செயல்பாடுகளைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும். சில தேசிய பாதுகப்பு சம்பந்தமான செயல்களைத் தவிர  அரசின் எல்லா நிர்வாகங்களையும் நாம் இச்சட்டத்தின் மூலம்  தெரிந்து கொள்ள முடியும். இதற்கு அந்த துறையை சார்ந்தவர்களாக நாம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. யார் வேண்டுமானாலும் அரசின் எந்த நிர்வாகத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள முடியும். ஏன் நாம் தகவலை கேட்கிறோம் என்று  நாம் காரணம் கூற அவசியம் இல்லை. இதில் ஒளிவு மறைவு இல்லை. இதனால் அரசு நம்மை ஏமாற்ற முடியாது. பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு நாம் அரசை கேள்வி கேட்கலாம். கேள்வி கேட்ட 30 நாட்களுக்குள் முறையான பதில் தரவேண்டும். 30 நாட்களுக்குள் பதில் தரவில்லையென்றால் சமந்தப்பட்ட அதிகாரிகள் அபராதம் கேட்ட வேண்டிய சூழல் உருவாகும்.   அவசரமான  செயல்களைக் குறித்து கேள்வி என்றால் 2 நாட்களுக்குள் பதில் தரவேண்டும்.  இச்சட்டத்தின் வலிமை நம் கையில் தான் இருக்கிறது.

                    நாம் இன்னும் தவறு செய்யும் அரசு அதிகாரிகளுக்கு பயப்படாமல் நமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையவது கேக்கத் துணிவோம். நாம் ஊர் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டாம். நம் பிரச்சனைகளையவது தட்டிக் கேட்கத் துணிவோம். அதற்கு வலிமையான ஆயுதமான தகவல் அறியும் உரிமை சட்டத்தைக் கையில் எடுப்போம்.        
              

          

1 comment:

  1. itha 3 varushathuku munadiye soliruntha nanum exam la appave pass aidrpan... remba late... irunthalum ini itha nan use pana try panran.

    ReplyDelete