Sunday 7 August 2011

இந்தியாவில் இல்லையா மருத்துவம்?

                  


                          திருமதி. சோனியாகாந்தி அவர்கள் புற்று நோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று உள்ளார் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஏன் நம் நாட்டில் புற்று நோய் சிகிச்சைக்கு மருத்துவம் சரியில்லையா?  ஏன் வெளி நாடு செல்ல வேண்டும்? நம் நாட்டில் புற்று நோய்க்கான மருத்துவம் சரி இல்லை என்றால் அதை மேம்படுத்த வேண்டியதுதானே.. நம் நாட்டில் உள்ள பெரிய பணக்காரர்கள், தொழில் அதிபர்கள் வெளி நாட்டிற்கு மருத்துவம் பார்க்க செல்லலாம். இங்கு மருத்துவ வசதி சரி இல்லை என்று கூறலாம். அவர்களால் இங்கு உள்ள மருத்துவத்தை மேம்படுத்துவது கடினம். ஆனால், நாட்டை ஆளும் திருமதி. சோனியாகாந்தி  அவர்களால் மருத்துவத்தை மேம்படுத்த முடியாதா? அப்படியானால், நாட்டிற்கு  எதற்கு  சுகாதரத் துறை அமைச்சர், இணை அமைச்சர், 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் சுகாதரத் துறை அமைச்சர்கள்? 120 கோடி மக்கள் இவரை நம்பி நாட்டை கொடுத்தால், இவர் இங்கு  மருத்துவத்தை மேம்படுத்தாமல் இருக்கிறார்...

                     இங்கே அவருக்கு மருத்துவம் செய்வதற்கு போதுமான வசதிகள் இருகின்றன அனால், அவர் அமெரிக்காவை சுற்றி பார்த்துவிட்டு அங்குள்ள சுற்றுச்சூழலில் மருத்துவம் மேற்கொண்டு அங்கே சிறிது காலம் ஓய்வு எடுப்பதாக கூறினால்... அதை ஏற்றுகொள்ள யோசிக்கலாம்.  ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளலாம்.. இருந்தாலும் பெரும்பான்மையான மக்கள் தலைவரையே பின்பற்ற நினைப்பதால் இவர்  இந்தியாவில் மருத்துவம் பார்ப்பது நல்லது. இது அம்மக்களுக்கு முன்னோடியாகவும்  இருக்கும். நம் நாட்டைப்பற்றிய நன் மதிப்பையும் காட்டும்.   

3 comments:

  1. சோனியா ஒரு இந்திய பிரஜை என்றால் நீங்கள் சொல்வது சரி, அவர் தான் இத்தாலி நாட்டவராச்சே.....! பிறகு, அவர் எப்படி இந்தியாவில் சிகிச்சை எடுத்துக்கொள்வார்.......?

    ReplyDelete
  2. இது கையில இந்தியா என்ன கொடுமை சாமி

    ReplyDelete